search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோமாலியா தாக்குதல்"

    • மொகடிசுவில் உள்ள ஓட்டலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர்.
    • அவர்கள் ஓட்டலில் இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.

    மொகடிசு:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்-கொய்தாவின் கிளை அமைப்பான அல் ஷபாப் மற்றும் ஐ.எஸ். போன்ற பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை அழிக்கும் பணிகளில் அந்நாட்டு பாதுகாப்புப் படை ஈடுபட்டு வருகிறது.

    ஆனாலும், இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள லிடோ கடற்கரை அருகே அமைந்துள்ள பிரபல ஓட்டலுக்குள் அல் ஷபாப் பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர். அவர்கள் ஓட்டலில் இருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் சிலரை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தனர்.

    தொடர்ந்து, தங்கள் உடலில் மறைத்து கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

    இந்தக் கொடூர தாக்குதலில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த பாதுகாப்புப் படையினர் அதிரடியாக செயல்பட்டு பிணைக்கைதிகளை மீட்டனர். மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

    மேற்கத்திய அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் ஷபாப் அமைப்பு தனது வானொலி மூலம் தெரிவித்துள்ளது.
    மொகதிஷு:

    சோமாலியாவில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுவினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி பொருட்சேதம் மற்றும் உயிர் சேதங்களை ஏற்படுத்துகின்றனர்.  குறிப்பாக தலைநகர் மொகடிஷுவில் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர்.

    அவ்வகையில், மொகடிஷுவில் உள்ள ஒரு பள்ளியின் அருகே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. காலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சமயத்தில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அல்கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதிப் படையினரின் பாதுகாப்புடன் வந்த மேற்கத்திய அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் ஷபாப் அமைப்பு தனது வானொலி மூலம் தெரிவித்துள்ளது.

    ஆனால், ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனம் அதிகாரிகளை அழைத்துச் சென்றதாகவும், நான்கு பாதுகாவலர்கள் காயமடைந்ததைக் கண்டதாகவும் நேரில் பார்த்த சாட்சி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறி உள்ளார்.
    ×